பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பத்தூரில் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முன்னிலை வகிக்க, விவசாய சங்க மாவட்ட தலைவர் சாமிகண்ணு, மாவட்ட செயலாளர் முல்லை உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
