ETN News சமீபத்திய அப்டேட்கள்
Jolarpettai · crime

ஓடும் ரயிலில் குழந்தைக்கு போதைப்பொருள் திணித்த இருவர் கைது

ரயிலில் பயணம் செய்த ஒரு வயது குழந்தையின் வாயில் போதைப்பொருளைத் திணித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஓடும் ரயிலில் குழந்தைக்கு போதைப்பொருள் திணித்த இருவர் கைது

ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயிலில், ஒரு வயது குழந்தையின் வாயில் போதைப்பொருளைத் திணித்த இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜ்கான் என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்தபோது, அதே பெட்டியில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் குழந்தையின் வாயில் புகையிலைப் பொருளைத் திணித்துள்ளார். இது குறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில், சிவகுமார் மற்றும் அவருக்கு உதவிய புத்தகுண்டா ரெட்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்