திருப்பூர் குறைதீர் கூட்டத்தில் 696 மனுக்கள் குவிந்தன
திருப்பூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 696 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 696 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உடனடி விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
