கோவை கோவில்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்
கோவை கோவில்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை அருகே கோவில்பாளையம் கவுசிகா ஆற்றங்கரையில், தோட்ட உரிமையாளர் ஒருவர் தனது தோட்டத்தில் சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், சிறுத்தை பதிவானது உறுதியானது.
வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சிறுத்தை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியிலிருந்து வறண்ட ஆற்றுப்பாதை வழியாக வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டாலும், மோதல் சம்பவங்கள் எதுவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
