ETN News சமீபத்திய அப்டேட்கள்
Coimbatore · politics

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்

டெல்லி போராட்டங்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் கோவையில் வழக்கறிஞர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு முறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்