கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தங்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறாவிடில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
