கோவையில் 3.40 லட்சம் பேர் இன்னும் ரேஷன் கார்டு பயோமெட்ரிக் பதிவு செய்யவில்லை
கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டு பயோமெட்ரிக் பதிவு செய்யாத 3.40 லட்சம் பேரிடம் பதிவு பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு உறுப்பினர்களில் இதுவரை 3.40 லட்சம் பேர் தங்கள் விரல் ரேகையை (பயோமெட்ரிக்) பதிவு செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது. 11.50 லட்சம் குடும்ப அட்டைகளில், முன்னுரிமை குடும்பங்களில் 96 சதவீதமும், மற்ற அட்டைகளில் 88 சதவீதமும் பயோமெட்ரிக் பதிவு நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள 97,782 குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் பதிவைப் பெற நியாயவிலைக்கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பதிவு செய்து வருகின்றனர். விடுபட்டவர்களிடம் பதிவு பெறுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் இதர காரணங்களால் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து குடும்ப அட்டையிலிருந்து நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கைரேகை பதிவு செய்யாதவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் நியாயவிலைக்கடைகளுக்குச் சென்று பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
