சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.35 வரை இருக்கும்: வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு
சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.35 வரை இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், கடந்த 15 ஆண்டுகால சந்தை விலையை ஆய்வு செய்து சின்ன வெங்காயத்தின் விலை நிலவரத்தைக் கணித்துள்ளது.
அதன்படி, அறுவடையின் போது பண்ணை விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் போலி விதைகள் போன்ற காரணங்களால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சந்தை நிலவரத்தை அறிந்து விவசாயிகள் விற்பனை குறித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
