சிங்கப் பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினர், கோவை மாநகரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசின் சார்பில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோவையில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் சார்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதுவரை மாநகரில் 1,100-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்படையினர் நேரடியாகச் சென்று பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
1091 மற்றும் 100 ஆகிய உதவி எண்களின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 1091 உதவி எண்ணுக்கு வந்த 33 அழைப்புகளில், 8 சி.எஸ்.ஆர். மற்றும் 7 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
