ETN News சமீபத்திய அப்டேட்கள்
Kinathukadavu · crime

கிணத்துக்கடவில் காரை ஆபத்தான முறையில் ஓட்டிய 4 பேர் கைது

கோவை - பொள்ளாச்சி சாலையில் காரின் மேற்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 4 பேர் கைது.

கிணத்துக்கடவில் காரை ஆபத்தான முறையில் ஓட்டிய 4 பேர் கைது

கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே காரில் ஆபத்தான முறையில் பயணித்த 4 நபர்களை கிணத்துக்கடவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காரின் மேற்பகுதியில் நின்றபடி காரை இயக்கியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், காரில் பயணித்த சரவணன், சென்றாய பெருமாள், ராகுல் குமார் மற்றும் நிர்மல்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்