ETN News சமீபத்திய அப்டேட்கள்
Coimbatore · government

குடியரசு துணைத் தலைவர் இன்று கோவை வருகை

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தருகிறார்.

குடியரசு துணைத் தலைவர் இன்று கோவை வருகை

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை 22) மதியம் விமானம் மூலம் கோவை வருகிறார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பா, மாநகர காவல் ஆணையர் என்.கண்ணன், மண்டல ஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரை வரவேற்க உள்ளனர்.

மதியம் 3.30 மணிக்கு பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள கோயிலில் நடைபெறும் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை விழாவில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் இல்லத்தில் ஓய்வெடுக்கும் அவர், இரவு 10 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குத் திரும்புகிறார்.

குடியரசு துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர், புறநகர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை ட்ரோன் கேமராக்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்