அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 32,770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நேற்று முதல் பிரதான கால்வாய் வழியாக விநாடிக்கு 440 கனஅடியும், ஆற்று வழியாக 250 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டது. ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
