உயர் ரக போதைப் பொருள் கடத்திய 5 பேர் கைது
கோவை மாநகரில் கஞ்சா மற்றும் உயர் ரக போதைப் பொருளைக் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டு, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாநகரில் கஞ்சா மற்றும் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குனியமுத்தூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், 70 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காரில் உயர் ரக போதைப் பொருள் கடத்திய வழக்கில் தொடர்புடைய 4 பேர் மற்றும் கஞ்சா விற்ற ஒரு நபர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
