மொழிபெயர்ப்பாளர்களுக்கு விஜயா வாசகர் வட்டம் விருதுகள் அறிவிப்பு
விஜயா வாசகர் வட்டம் சார்பில் இந்த ஆண்டுக்கான கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருதுக்கு அரும்பு சுப்பிரமணியன் மற்றும் ஷாஃபி செறுமாவிலாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் ஆண்டுதோறும் இலக்கிய பணிகளைப் பாராட்டி விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருதுகளுக்கு, இந்த ஆண்டு அரும்பு சுப்பிரமணியன் மற்றும் ஷாஃபி செறுமாவிலாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக அரும்பு சுப்பிரமணியனும், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக ஷாஃபி செறுமாவிலாயியும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புத் துறையில் இயங்கி வரும் இவர்களுக்கு, தலா ரூ.50,000 பரிசுத் தொகையும் நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
