உடுமலை திருமூர்த்தி நகர் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்பட வில்லை
உடுமலையில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படாததால், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உடுமலை தளி பேரூராட்சிக்குட்பட்ட திருமூர்த்தி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும், புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் ஒரே ஒரு வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்கும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது.
பெற்றோர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை என இரு துறைகளும் மாற்றி மாற்றி பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகின்றன. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு கருதி, மாவட்ட ஆட்சியர் இதில் நேரடியாகத் தலையிட்டு புதிய பள்ளிக் கட்டிடத்தைக் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
