ETN News சமீபத்திய அப்டேட்கள்
காங்கயம் · district

காங்கயத்தில் வேன் மோதி தம்பதி உயிரிழப்பு

காங்கயம் அருகே கோயில் சென்ற தம்பதி சரக்கு வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காங்கயத்தில் வேன் மோதி தம்பதி உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள களிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (55), தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருடன் இவரது மனைவி பேபி (47) சென்றார்.

நேற்று காலை இருவரும் சிவன்மலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ரவுண்டானா அருகே எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காங்கயம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்