கோவையில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
கோவை மாநகராட்சியில் 1.20 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் சுமார் 1.20 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி அமைப்பு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. தடுப்பூசி செலுத்தப்படும் ஒவ்வொரு நாயின் விவரமும் 'வேர்ல்டு வெடனரி சர்வீஸ்' செயலியில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் எந்த நாயும் விடுபடாமல் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
