வங்கதேசத்தினர் இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை
திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஆரிப் மியா, முகமது அலம்கிர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
