விவசாய நிலத்தையொட்டி செயல்படும் கல் குவாரியால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு
மடத்துக்குளம் அருகே விவசாய நிலங்களை ஒட்டிய கல் குவாரியால் வீடுகளில் விரிசல் மற்றும் காற்று மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை ஒட்டி செயல்படும் தனியார் கல் குவாரியால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், தூசி மற்றும் போக்குவரத்து நெரிசலால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குவாரியை மூடி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
