திருப்பூர் வருகை தரும் குடியரசு துணைத் தலைவர்: ட்ரோன்கள் பறக்க தடை
குடியரசு துணைத் தலைவர் திருப்பூருக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி அவர் செல்லும் இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (22-ம் தேதி) திருப்பூர் வருகை தருகிறார். அவர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கணக்கம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்ல உள்ளார்.
அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் பயணிக்கும் பாதைகள் மற்றும் தங்கும் இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை இயக்கினால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
