ஜே.எஸ்.ஆர். பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா
மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மெட்ரிக் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டு, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கு.சிவராமன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆங்கில மொழி புலமையை வெளிப்படுத்தும் வகையில் கதை தழுவிய பொம்மலாட்டம், நாடகங்கள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பள்ளியின் தாளாளர் எஸ். ராஜ்குமார் வழிகாட்டுதலில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
