திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் மற்றும் 30 நாள் ஊதியம் வழங்கக் கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பணியாளர்கள் கூறும்போது, தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் குடிநீர் விநியோகிப்பாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, 30 நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், தனியாருக்கு தூய்மைப் பணிகளை விடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
