இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்
கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் மீது கல் வீசி, எரிபொருள் ஊற்றிக் கொல்ல முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ரசாயனம் கலந்த திரவத்தை அவர் மீது வீசி எரிக்க முயன்றனர்.
இந்தச் சம்பவத்தில் லேசான காயமடைந்த பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுக்கரை போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
