சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்த 23 ரவுடிகள் கைது
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்ட 23 ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, போலீஸார் நடத்திய சிறப்புத் தணிக்கையில் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் 5 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 18 பேரும் என மொத்தம் 23 பேர், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
