ETN News சமீபத்திய அப்டேட்கள்
Ayyaneri · district

கோயிலில் திருடுபோன நகை கண்டுபிடிப்பு: சாமியாடிய பெண்ணால் பரபரப்பு

கோயிலில் திருடுபோன நகை, அருள் வந்து சாமியாடிய பெண்ணின் மூலம் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலில் திருடுபோன நகை கண்டுபிடிப்பு: சாமியாடிய பெண்ணால் பரபரப்பு

ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அய்யனேரி திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை 10 பவுன் நகை மாயமானதைக் கோயில் நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது, கோயில் பூசாரியின் மனைவி மகேஸ்வரிக்கு திடீரென அருள் வந்துள்ளது. அவர் தான் சாமியாடியபடியே, மாயமான நகை இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் கூறிய இடத்திலிருந்து நகை மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பக்தர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்