ETN News சமீபத்திய அப்டேட்கள்
Ponneri · crime

எஸ்.ஐ. தாக்கப்பட்ட விவகாரம்: ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் கைது

பொன்னேரியில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.ஐ. தாக்கப்பட்ட விவகாரம்: ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் கைது

பொன்னேரியில் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட வழக்கில், ரவுடியின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி பூபாலன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தச் சென்ற உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் மீது, அங்கிருந்தவர்கள் வாளால் தாக்கிவிட்டுத் தப்பினர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஓசன்னா உள்ளிட்ட இருவரை மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்தபோது போலீஸார் கைது செய்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்