கோயிலில் தொலைந்த அம்மன் நகையைச் சாமியாடிய பெண் கண்டுபிடித்த சம்பவத்தால் நெகிழ்ச்சி
திருத்தணி அருகே கோயிலில் மாயமான நகையை, சாமியாடிய பெண் கண்டுபிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை அய்யனேரி திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவின் போது, அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் செயின் மாயமானது. இது குறித்துக் கோயில் நிர்வாகத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
கோயிலில் விசாரணை நடந்தபோது, பூசாரியின் மனைவி மகேஸ்வரி திடீரென அருள் வந்து சாமியாடினார். 'நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது' என்று கூறியபடியே கருவறைக்குள் சென்று மறைந்திருந்த நகையை எடுத்துக் காட்டினார்.
திடீரென நகை கிடைத்ததால் பக்தர்கள் வியப்பும் நிம்மதியும் அடைந்தனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
