திருத்தணி காவல் நிலையம் அருகே இளைஞர் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்: தீவிர விசாரணை
திருத்தணி காவல் நிலையம் அருகே உணவு டெலிவரி செய்யும் இளைஞரின் கண்களில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி காவல் நிலையம் அருகே, உணவு டெலிவரி செய்யும் தமிழரசன் (32) என்பவரை மர்ம நபர்கள் கண்களில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளனர். இதைக் கண்டு பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தமிழரசனை போலீஸார் மீட்டு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவர் நேற்று இரவு 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
வழிப்பறி கும்பல் நகை, பணம் திருடும்போது தாக்கியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
