ஜூலை 27-ல் மதுரவாயலில் அதிமுக ஆர்ப்பாட்டம்
மதுரவாயலில் அரசுப் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி வரும் ஜூலை 27-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பகுதியில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும், சாலை பயனாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் வரும் 27-ம் தேதி மதுரவாயல், நெற்குன்றம் என்.டி. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
