ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chengam · government

செங்கம் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

செங்கம் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 21) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன்காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

செங்கம் நகரம், திருவள்ளுவர் நகர், குயிலம், பக்கிரிப்பாளையம், மில்லத் நகர், தளவாநாயக்கன்பேட்டை, அந்தனூர், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், அரசங்கண்ணி, மேல்பள்ளிப்பட்டு, நீப்பத்துறை, மேல்வணக்கம்பாடி, ஆண்டிபட்டி, கரிமலைப்பாடி, பரமனந்தல், குப்பநத்தம், கிளையூர், மேல்பட்டு மற்றும் மண்மலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் கு.ச.இளையராஜா தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்