பிருதூரில் பொன்னியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல்
வந்தவாசி அருகே உள்ள பிருதூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள பிருதூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி, கிராமத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, பெண்கள் பொங்கல் கூடைகளைச் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். அம்மன் திருவீதி உலா வந்ததைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
