ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tiruvannamalai · politics

திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா மற்றும் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், டெல்லியில் நாடாளுமன்ற நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்