ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tiruvannamalai · education

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் திருவண்ணாமலை பள்ளி மாணவி மூன்றாம் இடம்

தமிழ்நாடு நாள் கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த திருவண்ணாமலை பள்ளி மாணவி ஐஸ்வர்யாவிற்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார்.

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் திருவண்ணாமலை பள்ளி மாணவி மூன்றாம் இடம்

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி பா.ஐஸ்வர்யா, தமிழ்நாடு நாள் முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அவருக்கு ரூ.20,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

மேலும், அவர் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று ரூ.10,000 பரிசாகப் பெற்றிருந்தார். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியை செ.சுதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்