ஜவ்வாதுமலை கோடைவிழா நிறைவு: சிறந்த அரங்குகளுக்கு பரிசுகள்
ஜவ்வாதுமலையில் நடைபெற்ற இரு நாள் கோடை விழா நேற்று நிறைவடைந்தது; சிறந்த அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் இரு நாட்கள் நடைபெற்று வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த விழாவில் சிறந்த அரங்கு அமைத்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் கலந்துகொண்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, சிறந்த அரங்குகளுக்கான பரிசுகளை வழங்கினார். விழாவில் சிறந்த அரங்கு அமைத்திருந்த ஊரக வளர்ச்சி துறைக்கு முதல் பரிசும், நெடுஞ்சாலை துறைக்கு இரண்டாம் பரிசும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற இசை கச்சேரிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, ஆரணி கோட்டாட்சியர் சிவா, ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
