ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடியவர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலில் 8 பவுன் நகைகளைத் திருடி தலைமறைவாக இருந்த பட்டாச்சாரியார் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பட்டாச்சாரியாராக பணியாற்றி வந்தவர் ரகுராமன். கடந்த ஜூலை 2-ம் தேதி பூஜைகளை முடித்துவிட்டு சென்ற அவர், அதன் பிறகு பணிக்கு வரவில்லை.
சந்தேகமடைந்த கோயில் நிர்வாகிகள் கோயிலைத் திறந்து பார்த்தபோது, சுவாமி கழுத்தில் இருந்த 8 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரகுராமனைத் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த ரகுராமன், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நகையைத் திருடியதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
