திருவண்ணாமலை ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தைச் சேர்ந்த செவிலியர் மற்றும் 4 சிறுமிகள், நேற்று முன்தினம் சமுத்திரம் ஏரியில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி மூலம்: Government of Tamil Nadu - Press Releases
