இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பழங்குடியின இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞர் முன்னணி அயோத்திதாச பண்டிதர் நலப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இருளர் மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
