வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் 9-வது ஆண்டு விளையாட்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற 9-வது ஆண்டு விளையாட்டு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 9-வது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாணவர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் சுடர் ஏற்றுதல் மற்றும் உறுதிமொழி எடுத்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். விழா முன்னதாக கல்லூரி முதல்வர் செ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
