ஆரணியில் 2 உணவகங்களுக்கு ‘சீல்’: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
ஆரணியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர்.

ஆரணியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், சுகாதாரம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத 2 உணவகங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
ஆய்வின் போது உணவகங்களில் எலிகள் நடமாட்டம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் இருந்த 500 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. விதிமுறை மீறலில் ஈடுபட்ட உணவகங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
