செங்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிவேகமாக வந்த கார் சாலையோர கடை மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைகளுக்குள் புகுந்து, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 5 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு கோயிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் மின் கம்பம் உடைந்து சேதமடைந்தது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
