திருவண்ணாமலை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 26 வழக்குகளுக்கு தீர்வு
திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 26 வழக்குகள் சமரச முறையில் முடிக்கப்பட்டு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சாய்பிரியா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் காசோலை மோசடி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தம் 26 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, 85 லட்சம் ரூபாய் தீர்வுத்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
