வாய்க்காலில் கார் கவிழ்ந்து முதியவர் உயிரிழப்பு; 7 பேர் காயம்
திருவாரூர் அருகே கார் வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; குடும்பத்தினர் 7 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கார் வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த தில்லை (67) என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் வேளாங்கண்ணி சென்று கொண்டிருந்தபோது இந்த துயரம் நிகழ்ந்தது.
சாலையோரம் இருந்த வாய்க்காலில் கார் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்ததில் தில்லை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் இருந்த அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் வினோத் கண்ணா, கார்த்திக் கண்ணா, மருமகள்கள் ஹேமலதா, அங்கிதா மற்றும் பேரன் சாய் ஆனந்த் ஆகியோர் காயமடைந்தனர். விபத்து குறித்து கொரடாச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
