நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல் மூட்டைகளை அகற்ற வலியுறுத்தி திருவாரூரில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாததால் விவசாயிகள் சிரமப்படுவதாக கூறி, கொள்முதல் நிலைய பணியாளர்கள் தங்களின் பணியைப் புறக்கணித்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
