தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும்போது, தொகுதி மறுவரையறை மசோதாவில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதனை நிறைவேற்றுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றார்.
நாட்டின் அரசியல் சூழல் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்காக மற்ற கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
