பேரளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது
பேரளம் அருகே சிறுமியை காதலிப்பதாகக் கூறி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள பில்லூர் மாங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம்(20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை காதலிப்பதாகக் கூறி தவறாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பேரளம் போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
