உச்சிவாடி வீரமாகாளியம்மன் கோயிலில் மழை வேண்டி மஞ்சள் நீர் அபிஷேகம்
திருவாரூர் மாவட்டத்தில் வறட்சியைப் போக்கி மழை வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் வடபாதிமங்கலம் உச்சிவாடி கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மழை வேண்டியும், வறட்சியைப் போக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெண்கள் 108 குடங்களில் மஞ்சள் கரைத்த நீரைச் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கீழப்பெரம்பூர் பச்சை காளியம்மன் கோயிலிலும் பால்குட திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
