போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் குறுக்கு விசாரணை செய்யக்கோருவது அர்த்தமற்றது: உயர் நீதிமன்றம்
போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் குறுக்கு விசாரணை செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ரமேஷ் என்பவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் குறுக்கு விசாரணை செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் குறுக்கு விசாரணை என்ற பெயரில் நீதிமன்றத்திற்கு வரவழைத்து துன்புறுத்துவது அர்த்தமற்றது என்று குறிப்பிட்டார். சிறுமிகளின் மனவலியை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
