ராஜபாளையம் அருகே சேத்தூரில் தேங்காய் விற்பனை மையம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் விவசாயிகள் தேங்காய்களை நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் வேளாண் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்ய ஏதுவாக இ-நாம் (e-NAM) திட்டத்தின் கீழ் புதிய விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இதனைத் தொடங்கி வைத்தார்.
தென் மாவட்டங்களில் தேங்காய் சாகுபடி அதிகமுள்ள பகுதிகளில், விவசாயிகள் அறுவடை செய்யும் காய்களைச் சந்தையில் விற்பனை செய்யும்போது 10 முதல் 15 சதவீதம் வரை கழிவு என்ற பெயரில் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனைத் தவிர்க்கவே இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
