சிவகாசி அருகே சுகாதார வளாகத்தை இடித்து தனியார் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் பொது சுகாதார வளாகத்தை இடித்து தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில், அரசு பொது சுகாதார வளாகத்தை இடித்துவிட்டு தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சுகாதார வளாகம் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சுகாதார வளாகம் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், சாலை வசதி மற்றும் வடிகால் போன்ற வசதிகளும் இல்லாததால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, புதிய சுகாதார வளாகத்தை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
