விருதுநகரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்
விருதுநகரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சுமார் 4,300 பேர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

விருதுநகரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த போட்டியை நகராட்சித் தலைவர் மாதவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 4,300 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் மற்றும் பொதுமக்களுக்கு வாக்கத்தான் என தனித்தனி பிரிவுகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு செல்வம் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
